poles on road

img

சாலையில் மின் கம்பம் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு

அவிநாசியை அடுத்த நம்பியாபாளையத்தில் சாலையில் தீடீரென மின் கம்பம் விழுந்ததால் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. அவிநாசி ஒன்றியம், நம்பியாபாளையம் ஊராட்சிக் குட்பட்ட  ஆர்.ஆர்.மஹால் அருகில் கடந்த சில நாட்க ளுக்கு முன் கன்டெய்னர் லாரி கடந்து செல்லும்போது சாலையோரம் இருந்த மின் கம்பத்தின் மீது உரசியது.